Friday, January 27, 2017

பிலை பொருத்தமைக்கு ஆல்ந்த நன்றி

பிலை பொருத்தமைக்கு ஆல்ந்த நன்றி

என் இனிய தமில் மக்கலே , இதற்கு மேல் என்னாள் தாங்க  முடியவில்லை.  அதனாள் எலுதுகிறேன்.

தமில் ஒரு இனிய மொளி .

சுந்தர தெலுங்கு என்று மற்ற மொலிகலை வன்மம் இன்றி பாராட்ட உபயோகப்படுத்தப்பட்ட மொலி.

வால்நால் முளுவதும் கேட்க கேட்க திகட்டாத எலிய மொலி .

ஆணால் இன்று வலை தலங்களிலும் , தொளைக்காட்சியிலும், அரசியல் கலகங்கலின் கன்மனிகள் என்று  எல்லோர் வாயிலும் அகப்பட்டு பிலையோடும் ,குறையோடும் பேசப்படும்போது நெஞ்சு துடிக்கிறது . தலை சுலலுகிறது.

அந்த தாக்கத்தில் வந்த எலுத்துக்கல் தாம் இவை....

மொழிக்கு உயிர்-எழுத்து . உடல் - உச்சரிப்பு.

ஒன்றிருந்து மற்றொன்று இல்லையேல் உயிரில்லா உடலும் ,உடலில்லா உயிரும் போல் ஆகும்.

கவிதை பாட வேண்டாம். கட்டுரை எழுத வேண்டாம். காவியங்களை கரைத்தும்  குடிக்கவேண்டாம்.

ஏதோ உங்களால் ஆனது, இந்த மொழிக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்றால், இந்த 'ல '  ,'ள'  மற்றும் 'ழ'  எழுத்துக்களின் உச்சரிப்பை சரி செய்து கொள்ளுங்கள். சிறு பிராயத்திலே நாம் எல்லோரும் செய்த பிழைகள் தான்இவை.


picture courtesy : tamilsuvadugal.blogspot

'சா' வன்னா வராமல் , "பாவாடை கட்டை" என்றும் , 'ரா' வன்னா வராமல்
"சூலியன்"  என்றும்  பள்ளி செல்லா பாலகர் மழலையில் கொஞ்சினால் பாராட்டலாம் .

அதையே பத்து வயதுக்கு மேலே உள்ளோர் பேசினால் , தகர டப்பாவை துரு பிடித்த கத்தியினால் கீறுவது போல் கூசுகிறதே. ஐயோ !

சிறிது பயிற்சி, பின்னர்  பிரயத்தனம்  போதும். வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல எளிதாய் வந்திடும் சொற்கள்.

அப்படியே 'ர' , 'ற' வையும் கொஞ்சம் நன்றாக ,சரியாய் சொல்ல முயலுங்கள்.

ஐயோ ! தமிழையும் என்னையும் காப்பாற்றுங்கள். வேண்டுமாயின் இன்னபிற அந்நிய மொழி சொற்களை கலந்து கட்டி  பேசிக்கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து வாழைப்பழ தோலை  சரியாக குப்பை தொட்டியில் மட்டுமே போடுங்கள்.

வாலை பல தோலை கீலே போட்டு மட்டும் கொல்லாதீர்கள் என்னையும் ,செம்மொழியாம் தமிழையும்.

இப்பதிவில் வேண்டுமென்றே நுழைத்த தவறான உச்சரிப்பு உதாரணங்களுக்காக மன்னிக்கவும்.

பிழை பொருத்தமைக்கு  ஆழ்ந்த  நன்றி.


13 comments:

Unknown said...

Fantastic! Love the post. Unable to comment in Tamizh as I don't seem to have access to the script on my iPad. Love the tin example.

Amudha Bakthavathsalu said...

Wonderful Viji..indha tamilzh kolai patriya padhivu... Azhagu.. Sarcasm is catchy...😄😄😄

Panchanathan Suresh said...

கொஞ்சம் 'கஸ்டப்பட்டேன்', but enjoyed it! :)))

MEENAKSHI said...

அருமை.

Sri said...

சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் - மிக உண்மை. தாய் மொழியை கூட சரியாக உச்சரிக்க முடியாமல் 'நான் தமிளன்' என பெருமை பட்டு கொள்வது மிகவும் வருத்தத்தை தருகிறது!

Viji Ganesh said...

Thankyou Anonymous.

Viji Ganesh said...

Thankyou Amudha. தமிழ் கொலையுடன் நில்லாமல் , Junoon தமிழாக மாறிக்கொண்டும் வருவதை நினைத்தால் வலிக்கிறது.

Viji Ganesh said...

Panchanathan Suresh, Thanks for your time.யாம் பெற்ற கஸ்டம் பெறுக இவ்வையகம் !

Viji Ganesh said...

Thankyou Meenakshi.

Viji Ganesh said...

Yes, Sriram. Sad to think most are oblivious to the damage being done.
தமிளன் என்று சொன்னால் தலை நிமிர்ந்து நிற்பது எப்படியோ?

Mukundan Rajagopalan said...

Pinnitte viji. Keep writing.

Viji Ganesh said...

Thankyou Mukund :)!

Nalini Padmanabhan said...

Bang on! Pramadham Viji!
Andha Thagara dabba, thuruppidicha katthi... thought I was the only one feeling that way..