Thursday, March 8, 2018

மகளிர் தின வாழ்த்துக்கள்!

நியாயமான கோபங்கள் பலவுண்டு
பூமியின் பொறுமை எனக்கில்லை;

அர்த்தமற்ற வீம்புகள் சிலவுண்டு
எல்லோர்க்கும் மணம் வீசும் பூவின் குணம் எனக்கில்லை;

துணிவற்று சோர்ந்து போன தருணங்கள் பலவுண்டு
பின் நின்று காக்கும் முதுகெலும்பின் பலம் எனக்கில்லை;

அடக்க முடியாமல் அழுவதுமுண்டு
இடர் தாங்கும் இடிதாங்கியின் பக்குவம் எனக்கில்லை;

உவமை, உருவகப் பட்டாடை விலக்கி
நிறை குறை யோடு பாருங்கள்!

சுவாசமும் வெளிச்சமும் எனக்கும் தேவை!
மகளிர் தின வாழ்த்துக்கள்!

       

Sunday, November 26, 2017

சாகாவரம் ( sagavaram)

                                     சாகாவரம் 

எதை கொண்டு வந்தோம் ?  இதை விட்டு  
செல்வதற்கு என்று எண்ணி ,


மக்கும் கழிவாகி மண்ணுடன்  மண்ணாகி 
வேருக்கு மருந்தாகலாம்.


சந்தன கட்டையுடன் கட்டையாய் கனன்று, 
சாம்பலும் ஆகலாம் .


மனிதன் படைத்த அற்ப பிளாஸ்டிக்கே 
மறுபயன்பாடு , மறுசுழற்சி  என்று  உருமாற ,


இறைவன் இனிதே  வாழ இப்பிறப்பில்  
வாடகைக்கு கொடுத்த உடல் உறுப்புகளை 


ஒப்பந்த கால முடிவில் ஒப்புதலுடன்  
வேறொருவருக்கு  கொடுப்பின் ,

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காவிடில் 
சாகாவரமும் சாத்தியமே !


Wednesday, November 22, 2017

நினைவுப்படிகளில் சறுக்கிய போது

பாண்டிச்சேரி முருகேச பாரதி பள்ளி.  மூணாம் கிளாஸ் என்று ஞாபகம்.

நானும் எதிர்வீட்டு ராதி எனும் ராதிகாவும் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தோம்.
இல்லை, சென்றோம்.
இல்லை இல்லை , சென்று கொண்டு இருக்கிறோம்.

2017 ல் இருந்து நினைவுப்படிகளில்  சறுக்கி 1976 ல் விழுந்ததில் காலக்குழப்பம். நினைத்துப்பார்க்கையில் தொடர் நிகழ் காலம் போல தோன்றுகிறது.  பூரண தொடர் நிகழ் காலம் போலவும் இருக்கிறது .

சட்டென்று ஜன்னல் கண்ணாடியில் என் பிம்பத்தை பார்த்ததில்   கண்டிப்பாக கடந்தகாலம்தான் என்று புரிகிறது.

முன்னும் பின்னுமாகத்தான் இருக்கப்போகிறது. வருடம்,வகுப்பு எல்லாம் சொல்லியாயிற்று. என் வயதை கண்டுபிடித்து விடுவீர்கள்.அட.. இள  நரையாய் இருந்தது  முழு நரையாய் ஆன பின் எல்லாம் வெட்ட வெளிச்சமே .

தனியாக நடந்து போகும் தூரம் தான். இப்போது போல் வீடே திரண்டு வாசலுக்கு வந்து , கடல் கடந்து வெளி நாட்டிற்கு சென்று படிக்கப்போகும் போ து  கொடுக்கப்படும் பிரியாவிடை எல்லாம்  பள்ளி செல்லும் எங்களுக்கு  கிடையாது.

பாட சாலைபோக வேண்டும் பாப்பா எழுந்திரு , செல்ல  பாப்பா எழுந்திரு!

என்று எம்.பி.ஸ்ரீநிவாஸ் பாடி எழுப்புவார் . போட்டதை சாப்பிட்டுவிட்டு சமர்த்தாக ஸ்கூலுக்கு கிளம்புவோம்.

தெரு முனைக்கடையில் அஞ்சு பைசாவிற்கு பச்சை கலர் செலோபன் பேப்பர் சுற்றிய பாரி சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டே ஸ்கூல் வந்து சேருவோம். இப்போது போல் ஸ்கூல்  பஸ்சில் ஏறி ட்ராபிக்கில் மாட்டிக்கொண்டு "சோர்வோம்" இல்லை.

பச்சை கலர் சாக்லேட் பேப்பரை தூக்கி போட மாட்டோம். அதை முறுக்கி , நீட்டி வார்லி ஆர்ட் பொம்மை மாதிரி செய்வோம்.இன்று வரை அந்த  பச்சை நிறத்தின் மேல் ஒரு தீரா மோகம் ...இப்போதுதான்  பீரோ முழுதும் பச்சைப்பசேல் என்று இருப்பதன் காரணம் புரிகிறது.

அன்றைக்கு ஸ்கூல் கடைசி நாள். மாதத்தின் முதல்  நாள். பரீட்சை முடிந்து ரிப்போர்ட் கார்டு  கொடுக்கும் நாள்.

வகுப்பில் பையை வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச்  சென்றோம்.

என்ன? வாட்டர் பாட்டிலா ? அதெல்லாம் கிடையாது.அழகாய் இடது கையால் குழாவை திறந்து குனிந்து வலதுகையை வாய்க்கும் குழாவிற்கும் பாலமாய் வைத்து வயிறார நீர் குடிப்போம்.

இப்போது கூட ஏர்போர்ட்களில் இதுபோன்று ஏதோ ஒரு குழாவை  வைத்து முயற்சி செய்கிறார்கள். ஆர்வக்கோளாறில் அதை உபயோகப்படுத்தப்போய் முகம், தலை, மேல் பாதி உடல் முழுதும் சொட்ட சொட்ட நனைந்த படியே பிலைட் ஏறிய ஞாபகம்.

சே !எந்த ஒரு புதிய உபகரணமும் ஏன் தான் இப்படி பழி வாங்குகிறதோ ..அதுவும் நமுட்டுச்சசிரிப்புடன் நகரும் நாம் பெற்ற செல்வங்களின் முன்னால்.

ஸ்கூல் மைதானத்தில் காலை வழிபாடு.எல்லோரும் வகுப்பு வாரியாய் நிற்க,அவரவர் வகுப்பு ஆசிரியர் கடைசியில் நிற்பார்.எங்களுக்கு சந்துரு சார் என்று நினைவு. கணக்கு வாத்தியார். மறக்க முடியுமா?! நிர்மலா மிஸ் இங்கிலிஷ் எடுப்பார்.
சந்துரு சார் , அடிக்கடி, யாருக்கு மாப்பிள்ளை  யாரோ ,என்ற பாடலை விசில் அடித்துக்கொண்டே இருப்பார்..டியூன் கூட சுமாராக  சரியாக இருக்கும். நிர்மலா மிஸ்ஸிடம் லேசா  ஒரு ரியாக்க்ஷன் இருந்தது போல் இப்போது தோணுகிறது!

சிறிய ஸ்கூல்.ஆறாவது வகுப்பு வரை தான் அப்போது என்று நினைக்கிறேன்.
ஸ்கூல் மெயின் கேட்டை மூடப்போனார் சந்துரு சார். அதற்கு அப்புறம் வருபவர்கள் லேட் ! வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும் சிறிது நேரம்.

நானும் எவ்வளவோ முயற்சி செய்துஇருக்கிறேன் அந்த அனுபவத்திற்கு ஏங்கி.
எம்.பி.ஸ்ரீநிவாஸால் கெட்டது .

"சார் சார்!" என்று கூவினேன்.கேட்டை மூடி திரும்பிய சந்துரு சார்,"என்ன?" என்று முறைத்தார் . எச்.எம் வேறு வந்துவிட்டார்.

" எங்க அம்மா அதோ  வராங்க சார் ரிப்போர்ட் கார்டுக்கு " என்றேன். அவர் திரும்பி கேட்டை திறக்க போகும் போது ...."ஏப்ரல் fool " என்று கத்தி சிரித்தேன்.
நிர்மலா டீச்சரும் சிரித்து விட்டார்கள்.
ஒரு விதத்தில் என்னை காப்பாற்றிய காவல் தெய்வம் நிர்மலா டீச்சர் !

எப்படித்தான் அப்படி ஒரு முட்டாள் தனமான தைரியம் வந்ததோ எனக்கு. அன்றைக்கு ஆரம்பித்தது ..இன்று வரை  யோசிக்காமலே பேசிப்பேசி எப்போதும் சத்ரு திசை தான்!

 நான் இதை சிரித்து  சிரித்து, என் பிறவி பயன்களான என் குழந்தைகளிடம் சொல்ல , இருவரும் சலனமே இல்லாமல் என்னை .பார்த்துக்கொண்டே இருந்தனர்.

அன்றைக்கு வாங்காத திட்டெல்லாம் இன்றைக்கு வாங்கினேன்,இதுகளிடம்.
இதுலே எங்கே தைரியம் இருக்கு. ஜோக் எங்கே இருக்கு .. என்று இளக்காரம் வேறு.

அதோடு மிரட்டல் வேறு .."என் பிரண்ட்ஸ் வரும் போது இப்படி ஏதாவது கெக்கே பிக்கேன்னு பண்ணினே..." என்று.

அந்த காலத்துக்கு இது எவ்வளவு  பெரிய விஷயம். கணக்கு வாத்தியாரை பழிவாங்கற சுகம் எல்லாம் சொல்லி புரியாது.

நாங்க வாழ்ந்தது வேற ஒரு கிரகமோ என்று நினைக்க தோன்றியது...மேலும் நினைவுகள் பின் தள்ள, நேரம் போனதே தெரியவில்லை . இன்றைக்கு இரவு சாப்பாட்டிற்கு நிலைய வித்வான் தான் என்று தீர்மானித்தேன் .
அதான், நம்ம ரவா உப்புமா!

வாட்ஸப் , பேஸ்புக், கேவலம் போன் கூட இல்லாத காலம். சந்துரு சாரும், நிர்மலா மிஸ்ஸும் கல்யாணம்  பண்ணிக்கொண்டார்களா என்று ரொம்போ நாள் யோசித்து இருக்கிறேன்....

ஜெய் ஷங்கர் -ஜெயசித்ரா மாதிரி ஜோடி பொருத்தம்......ஐயோ,
ரவை தீயும் வாசம் வர அவசரமாக ஏறி வந்தேன் மீண்டும்  2017 க்கு.Friday, March 31, 2017

இரு கோடுகள்


முழுவதுமாய் முழிப்பதற்குமுன் கைப்பேசி சிணுங்கியது. எழுந்து எடுப்பதற்குள் , யாராயிருக்கும் என்று ஒரு பத்து யூகங்கள்.
அதில் ஒன்றிரண்டு வயிற்றைக் கலக்கும் வகையைச் சார்ந்தவை.

அவள் வீட்டில் வேலை செய்யும் சுலோ என்ற சுலோச்சனா சுப்ரபாதம் பாடி
"மாமியாருக்கு உடம்பு சரியில்லேன்னு ,ராவைக்கே பஸ்லே செஞ்சிக்கு வந்திட்டோம்க்கா. எப்போ வருவேன்னு தெரியலேக்கா " என்று கைபேசி மூலம் ஒரு அணுகுண்டை சர்வசாதாரணமாக வீசியதிலிருந்து ஒரே பதற்றம் நந்திதாவிற்கு.

கழிவிரக்கமும் , சுயபச்சாதாபமும் ஓங்க , ஐந்து கடல்,ஆறு மலை ,ஏழு கொள்ளி வாய்ப்பிசாசுகளைக் கடக்கவேண்டிய மன நிலையுடன் பாத்திரங்களைத் தேய்த்தாள் நந்திதா.

"ஐயோ , இனிமேல் யாரைப்போய் தேடுவேன்.காலை ஏழு மணிக்கே வரணும், கை ,வாய் மற்றும் வேலை சுத்தமாக இருக்கவேண்டும்.லீவு போட்டால் முன்னரே சொல்லும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் எனக்கு வரும் கனவுகளைப் பொறுமையாக ( சிரிக்காமல் ) கேட்க வேண்டும்.

சுலோ மாதிரி கிடைப்பது கஷ்டம்" என்றாள் சோகமாய் நந்திதா .

இத்தனை கல்யாண குணங்களைக் கொண்டவளா நம் சுலோ, என்றால் அதுதான் இல்லை.

பேருக்கு ஏற்றார் போல் தான் வேலையும் . ஆனால் உற்ற தோழி.வீட்டு வேலை பளுவை வெகுவாகக் குறைக்க , நந்திதாவிற்கு கிடைத்த வரன்.

அவள் இன்றி ( உடம்பில்) ஓர் அணுவும் அசையாது.

முதலில் பிடிக்காமல் ..பின்னர் பழகிப்போய் ..இப்போது அவள் வரவில்லை என்றால் வாழ்வே அஸ்தமித்ததைப் போல் உணரும் சராசரி மனுஷி நந்திதா .


"டேய் , கார்த்திக் , இன்னிக்கி 'சுலோ பாய்சன்' டா நமக்கு.திட்டு வாங்காம ஸ்கூல் போகணும்னா சீக்கிரம் எழுந்து கிளம்பிடு " என்று நந்திதா காதுக்கு எட்டாமல் விஷயத்தை ரகசிய பரிபாஷையில் மகனிடம் சொன்னான் முரளி. நந்திதாவின் டென்ஷன் அவ்வளவு பேர் போனது அந்த வீட்டில்!

பாத்திரம் மட்டும் தேய்த்து பாக்கி வேலைகளை அப்படியே விட்டு விட்டு லன்ச் டப்பாக்களைக் கட்டினாள் நந்திதா.

பரபரப்பு குறையாமல் கிளம்பி ஆபீஸ் வேனில் ஏறிய பின் அம்மா, தங்கை,அக்காவிற்கு போன் மூலமாகவும்,ஸ்கூல் பிரண்ட்ஸ் , ஆபீஸ் பிரண்ட்ஸ் மற்றும் இன்ன பிற குரூப்களுக்கு வாட்சப் மூலமாகவும் சுலோ நின்று விட்ட சங்கடத்தைப் பற்றி புலம்பித் தீர்த்தாள்.

பேஸ்புக்கை மட்டும் ஏன் விடுவானேன் என்று அதிலும் அலங்காரமாய்
மிகைப்படுத்தப்பட்ட ஒரு புலம்பலை வைத்தாள்.

ஆபிஸ் வந்து விட்டது ..இன்னும் தீரவில்லை சுலோ வராத துக்கம்,நந்திதாவிற்கு. யார் மாட்டப்போகிறார்களோ !

ஆபிஸில் ஒரே பரபரப்பு. எல்லோரும் ஒருவித சோகத்துடன் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர் .

ரமாவின் தந்தை இறந்துவிட்டாராம். எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர்.

நந்திதாவிற்கு சுரத்தே இல்லை. தன் அப்பாவை பற்றி உடனே கவலை தொற்றிக்கொண்டது . ரமாவின் அம்மாவின் நிலைமையும் கண் கலங்க வைத்தது.

எப்படியோ நாளை கழித்து, 6 மணி அளவில் வீட்டிற்கு வந்து விட்டாள். விளக்கு கூடப் போடாமல் அன்றைய நிகழ்வுகளை இருட்டில் சோபாவில் உட்கார்ந்து அசைபோட்டாள்.

வீட்டு வேலை செய்பவள் வரவில்லை என்ற அற்ப விஷயத்திற்கு, தான் அளவுக்கு மீறி அங்கலாய்த்தது தன் மீதே வெறுப்பையும் , கோபத்தையும் வரவழைத்தது.

ரமாவின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு முன் இது சில்லறைத்தனமாகத் தெரிந்தது.

"அம்மா பசிக்குது " என்று டென்னிஸ் ராக்கெட்டை சோபாவில் போட்டபடியே வந்த கார்த்திக்கின் குரல் கேட்டு சுயநினைவிற்கு வந்தாள்.

அதற்குள் முரளியும் வர , "எல்லோரும் சாப்பிட வெளியே போலாம் " என்றான், சுலோ வராத டென்ஷனில் நந்திதா இருப்பாள் என்று யூகித்து.

"இல்லை நானே ஏதாவது சட்டுன்னு பண்ணி கொடுக்கறேன் " என்று சொன்னவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் கார்த்திக்கும், முரளியும்.

உதட்டைப் பிதுக்கி, தோளை உயர்த்தி உள்ளே சென்றான் கார்த்திக். முரளி நந்திதாவுடன் சமயலறைக்குள் நுழைந்து என்னவென்று கேட்டான் ..

சொல்லிமுடித்த நந்திதாவிடம், "ஹ்ம். எந்த வயதிலும் பெற்றோரின் இழப்பு தாங்கவே முடியாத சோகம் தான். ரமாவின் அப்பா வயசானவர். பேரன் பேத்தி எல்லாம் பார்த்து விட்டார். அவள் அம்மாவிற்கு கஷ்டம்தான். ராமாவிற்குமே கூட கஷ்டம்தான். ஆனால் கொஞ்சம் நினைத்துப் பார் ..கார்த்திக் பிரண்டோட அப்பா போன வாரம் மாரடைப்பால் திடீரென்று 47 வயதில் இறந்து போனாரே..? இரண்டு பிள்ளைகள்,மனைவி , தாய் எல்லோரையும் கதற விட்டு ..அந்த கொடுமைக்கு என்ன சொல்வது" என்றான்..

"ஆமாம் முரளி ..இரு கோடுகள் ப்ரின்சிபிள் தான்.

தனியாய் பார்த்தால் தான் சுலோ வராத சின்ன ,அல்ப கஷ்டம் கூட பூதாகாரமாய் தெரிகிறது ". .என்றாள் நந்திதா புதிய தெளிவுடன்.

"அதே மாதிரி மத்தவங்க சந்தோஷத்தைப் பார்த்து லேசா பொறாமையும் ,புகைச்சலும் வரா மாதிரி இருந்தா கூட, உடனே நமது கோட்டை பெரிசா இழுத்து நம்மை விட கீழே இருப்பவங்க கோட்டை சின்னதா போட்டுத்  தேத்திக்கனும்." என்றான் முரளி.


"டின்னர் ரெடியா ? " என்று வெளியே வந்த கார்த்திக்கிடம் , " மாத்ஸ் மார்க் வந்ததா, எவ்வளோ ?" என்றான் முரளி .

65% என்ற கார்த்திக்கிடம், " ஏண்டா ? நல்ல மார்க் இல்லியே " என்றான் முரளி ..

"பேப்பர் கஷ்டமா இருந்தது...அதே இரு கோடுகள் லாஜிக் தான் பா ..என்னோட நிறைய பேர் கம்மி மார்க். " என்றானே பார்க்கலாம்!


Saturday, March 25, 2017

காலப்பிழை


"ப்ரியா, ரெடியா, எவ்வளவு நேரமா கிளம்புவே ?"

" உன்னாலதான் லேட் மா . ஒழுங்கா ஜீன்ஸ் அண்ட் டி ஷர்ட் போட விடாமே பாவாடை தாவணி போடுன்னு  சொல்ற. சரியான அவஸ்தை பிடிச்ச  டிரஸ். தாவணியிலே ஸ்டிட்ச்சே கிடையாது. பிளவுசிலே  ஏகப்பட்ட ஸ்டிட்ச்செஸ். "

"என்னிக்கோ ஒரு நாள் தானே? பாட்டி வில் பி ஸோ ஹாப்பி" 

ஒரு வழியாய் ரத்னாவும் ப்ரியாவும் ,ரத்னாவின் அம்மா வீட்டிற்கு கிளம்பி வந்து சேர்ந்தனர் .

"ஹாய் பாட்டி " என்ற ப்ரியா ஆச்சர்யத்துடன் தன்னையே பார்த்த பாட்டியிடம்.. "பாட்டி ப்ளீஸ் , ப்ரில் போட்டு தேச்சுவெச்ச  குத்து விளக்கு மாதிரி இருக்கே அப்படின்னு கெக்கே பிக்கேன்னு  சொல்லாதே . ஒரே அவஸ்தை இந்த தாவணி " என்று உரிமையோடு பொய்யாக கோபித்துக்கொண்டாள் .

ரத்னாவை பார்த்து பரிமளம் , "அவள்  இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணிக்க  விடேன்." என்றாளே பார்க்கலாம்.!  

ரத்னா தன் அம்மாவை முறைத்துக்கொண்டே ,"என்னம்மா இப்படி கவுத்துட்டே என்னை. இந்த சுதந்திரம் எனக்கு காலேஜ் போகும்போது குடுத்தியா  நீ? " என்றாள். 

"பாட்டி, குழியப்பம் கூட கெட்சப் இருக்கா ?" என்று கேட்டுக்கொண்டே தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு தாத்தாவுடன் டிவி பார்க்க சென்றுவிட்டாள் ப்ரியா.

"பேப்பர்லே ரெண்டுநாள் முன்னாடி  கூட கண்றாவி  நியூஸ் ,யாரோ ஒருத்தன் 10 வயசு பெண் குழந்தையை  பலாத்காரம் பண்ணிட்டானாம் .என்ன ஜென்மங்களோ...

இதுக்கெல்லாம் பார்த்தா இடுப்பு தெரியற தாவணிக்கு பதில் முழுசா கவர் பண்ற ஜீன்ஸ் டீ ஷர்ட் எவ்வளவோ பெட்டர் " என்று அங்கலாய்த்தாள் பரிமளம்.

" உனக்காக இன்னிக்கு போட்டுக்க சம்மதிச்சா. இல்லேன்னா அவள்  இஷ்டப்படி தான் டிரஸ்.இந்த காலத்து பசங்க ரொம்ப ஸ்மார்ட். அடக்கமாகவும் அதே சமயம் சௌகர்யமாகவும் டிரஸ்  பண்ணிக்க தெரியும். ஆனா ஒருத்தர்  போடற ட்ரெஸ்ஸுக்கும், கேடு கெட்ட ராஸ்கல்ஸ் பலாத்காரம் பண்றதுக்கும், சம்பந்தமே  இல்லம்மா .. .. " என்றாள் ரத்னா.

" நீ இப்படி காலத்துக்கு ஏற்ற  மாதிரி கண்ணோட்டத்தை மாத்திக்கறது ரொம்போ பெருமையா  இருக்கு " என்று சொன்ன  ரத்னா திடீரென தன்  தாய்  விசும்புவதை கவனித்தாள்...

பதட்டத்துடன்  "என்னம்மா ? அப்பாவோட சண்டையா ? ஏன் அழறே ?" என்றாள் .

"இல்லை ரத்னா ...இந்த பலாத்கார நியூஸ் என்னை ரொம்பவே  பாதித்துவிட்டது ..வீட்டு  மாப்பிள்ளை என்ற ஹோதாவில் உங்க அத்தை புருஷன் , அதான் அந்த படுபாவி , உன்கிட்ட தப்பா நடந்துண்டதை, நீ ஆறாவது படிக்கும் போது திக்கி திணறி என்கிட்டே சொல்ல வந்த போது நான் அப்பிராணியா இருந்திட்டேனே .. உன்னை காப்பதலே ..ரொம்பவும்  தப்பு பண்ணிட்டேன்... "

அந்த படுபாவி , இப்போ  நல்லவனா நடிக்கறான்  என்றும் ,  நரகம் தான் அவனுக்கு நிச்சயம்  என்றும் அரற்றிக்கொண்டே  அழுதாள் பரிமளம்.

"என்னை மன்னிப்பியா ரத்னா ?" என்று நொந்து போய்க்கேட்ட பரிமளத்தை பார்க்க சங்கடமாய்  இருந்தது ரத்னாவிற்கு. 

" நீ வேணும்னு பண்ணலேம்மா. உனக்கு அப்படி நடக்கும்னு ஒரு கிஞ்சித்தும்  சந்தேகம் வரலே . நீ  என்ன பண்ணுவே"....என்றாள் ரத்னா எங்கேயோ பார்த்துக்கொண்டு ..

"அப்போ நான் கோட்டை விட்டுட்டேன், ரத்னா..ஆனா நேற்று நானும் அப்பாவும் அந்த கேடுகெட்டவன் வீட்டுக்கு போய் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி எல்லாத்தையும் சொல்லி கேட்டுட்டு வந்தோம்" என்று பரிமளம் சொல்லும் போது தான், எங்கோ நிலை குத்தி நின்ற ரத்னாவின்  பார்வை, மீண்டும்  பரிமளம் பக்கம் ஆச்சர்யத்தோடு திரும்பியது.

 அத்தையும் அந்த கேடு கெட்டவனும்  ஆடிப்போய்விட்டனர் என்று கூறிய பரிமளத்தை பார்த்து ,"எப்படிம்மா இவ்வளவு தைரியம்  வந்தது உங்களுக்கு " என்று வியப்பு மாறாமல் கேட்டாள் ரத்னா.

தன்   மகள்  பட்ட கஷ்டத்துக்கு, தானே  ஒரு காரணமாக  ஆகிவிட்டோமோ   என்ற குற்றஉணர்வு தந்த உத்வேகம் தான் அந்த தைரியத்திற்கு காரணம் என்றாள் பரிமளம்.

"அப்புறம்? " என்றாள் ரத்னா தன்  காதையே நம்ப முடியாமல்..

" அப்புறம் என்ன, அந்த சண்டாளனைப்  பத்தி தெரியும் போல இருக்கு அத்தைக்கு ..அவள் மட்டும் விசும்பிக்கொண்டே   இருந்தாள். அவன் கற்பூரம் அடிச்சு சத்தியம்  அப்படி இப்படின்னு பினாத்தினான் ..அதற்கு   அப்பா, எந்த கோவில் ,சாமி முன்னாடி சத்தியம்  போட்டாலும் செல்லாதுடா, மன்னிப்பே கிடையாது உனக்கு என்று சொல்லிவிட்டு அங்கே நிற்கப் பிடிக்காமல், திரும்பி பார்க்காமல் வந்து விட்டோம் " என்று மேலும் கீழும் மூச்சு இறைக்க ஆவேசத்தோடு சொல்லி முடித்தாள்  பரிமளம்.

"வாவ் , ஆசம்  பாட்டி ! நீ எங்க அம்மாவோட ரொம்போ தைரியம்  "  என்று ஓடி வந்து பரிமளத்தை கட்டி கொண்டாள், பாட்டி அழும்  சத்தம் கேட்டு  அமைதியாக இதை எல்லாம்  பின்னாலிருந்து தாத்தாவுடன் கேட்டுக்கொண்டிருந்த ப்ரியா !

சற்றே திகைத்துப்போன  பரிமளம், ப்ரியாவிற்கு இதெல்லாம் தெரியுமா என்று கலக்கத்துடன் கேட்டாள்.

" ஸ்வீட் பாட்டி, எனக்கு நடந்தது எல்லாம் தெரியும். என்னை  இந்த மாதிரி ஆபத்திலிருந்து காப்பாத்திக்கவும் தெரியும். அம்மா சொல்லி குடுத்திருக்கா " என்றாள் பாட்டியை மேலும் இறுக்கிய ப்ரியா.

ரத்னாவிற்கு தன்னை நெருக்கிக் கொண்டிருந்த  ஏதோ  ஒன்று சட்டென அவிழ்ந்தது போலவும் ..முதுகெலும்பு சற்றே நேராய் ஆனதுபோலவும் , தன்னை சுற்றியுள்ள எல்லாமும் எல்லாரும் புதிதாய் தெரிவது போலவும் இருந்தது.

"இது போதும்மா எனக்கு ..மன்னிக்க மாட்டேன். ஆனா இனிமேல் மறப்பது சுலபம் " என்று ரத்னா சொல்லும்போது எல்லோர் கண்ணிலும் கண்ணீர் ..கூடவே உதட்டில் புன்னகையும் ..முகத்தில் தெளிவும் .

"ஒரு கொடும்பாவி, நல்லவனாக எல்லோர் முன்னால்  தெரிவது காலப்பிழையினால்  வந்த காட்சிப்பிழை தான்.

இதில்  உன் பிழை எதுவும் இல்லை" என்று ரத்னாவின் தலையை வாஞ்சையுடன் வருடிக்கொண்டே சொன்னார் அவள் அப்பா, ஒய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்.

"வாவ் ,தாத்தா !"  எனக்கும் புரியற தமிழிலே சொல்ல முடியுமா ?" என்றாள்  ப்ரியா !!

அது ஓண்ணும் இல்லேம்மா , கொஞ்சம் லேட்டா அக்யூஸ் பண்ணினால் ,அவன் அதுவரைக்கும் நல்லவனா தெரியறது வெறும் மிராஜ் எபக்ட்  தான். காட்சிப்பிழை.

காலப்பிழையினால் வந்த காட்சிப்பிழை.
வருடந்தோறும் ஏப்ரல் மாதம் தேசிய அளவில் குழந்தைகள் மேலான வன்முறை தடுப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

April every year is observed as  National Child Abuse Prevention month..


Friday, January 27, 2017

பிலை பொருத்தமைக்கு ஆல்ந்த நன்றி

பிலை பொருத்தமைக்கு ஆல்ந்த நன்றி

என் இனிய தமில் மக்கலே , இதற்கு மேல் என்னாள் தாங்க  முடியவில்லை.  அதனாள் எலுதுகிறேன்.

தமில் ஒரு இனிய மொளி .

சுந்தர தெலுங்கு என்று மற்ற மொலிகலை வன்மம் இன்றி பாராட்ட உபயோகப்படுத்தப்பட்ட மொலி.

வால்நால் முளுவதும் கேட்க கேட்க திகட்டாத எலிய மொலி .

ஆணால் இன்று வலை தலங்களிலும் , தொளைக்காட்சியிலும், அரசியல் கலகங்கலின் கன்மனிகள் என்று  எல்லோர் வாயிலும் அகப்பட்டு பிலையோடும் ,குறையோடும் பேசப்படும்போது நெஞ்சு துடிக்கிறது . தலை சுலலுகிறது.

அந்த தாக்கத்தில் வந்த எலுத்துக்கல் தாம் இவை....

மொழிக்கு உயிர்-எழுத்து . உடல் - உச்சரிப்பு.

ஒன்றிருந்து மற்றொன்று இல்லையேல் உயிரில்லா உடலும் ,உடலில்லா உயிரும் போல் ஆகும்.

கவிதை பாட வேண்டாம். கட்டுரை எழுத வேண்டாம். காவியங்களை கரைத்தும்  குடிக்கவேண்டாம்.

ஏதோ உங்களால் ஆனது, இந்த மொழிக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்றால், இந்த 'ல '  ,'ள'  மற்றும் 'ழ'  எழுத்துக்களின் உச்சரிப்பை சரி செய்து கொள்ளுங்கள். சிறு பிராயத்திலே நாம் எல்லோரும் செய்த பிழைகள் தான்இவை.


picture courtesy : tamilsuvadugal.blogspot

'சா' வன்னா வராமல் , "பாவாடை கட்டை" என்றும் , 'ரா' வன்னா வராமல்
"சூலியன்"  என்றும்  பள்ளி செல்லா பாலகர் மழலையில் கொஞ்சினால் பாராட்டலாம் .

அதையே பத்து வயதுக்கு மேலே உள்ளோர் பேசினால் , தகர டப்பாவை துரு பிடித்த கத்தியினால் கீறுவது போல் கூசுகிறதே. ஐயோ !

சிறிது பயிற்சி, பின்னர்  பிரயத்தனம்  போதும். வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல எளிதாய் வந்திடும் சொற்கள்.

அப்படியே 'ர' , 'ற' வையும் கொஞ்சம் நன்றாக ,சரியாய் சொல்ல முயலுங்கள்.

ஐயோ ! தமிழையும் என்னையும் காப்பாற்றுங்கள். வேண்டுமாயின் இன்னபிற அந்நிய மொழி சொற்களை கலந்து கட்டி  பேசிக்கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து வாழைப்பழ தோலை  சரியாக குப்பை தொட்டியில் மட்டுமே போடுங்கள்.

வாலை பல தோலை கீலே போட்டு மட்டும் கொல்லாதீர்கள் என்னையும் ,செம்மொழியாம் தமிழையும்.

இப்பதிவில் வேண்டுமென்றே நுழைத்த தவறான உச்சரிப்பு உதாரணங்களுக்காக மன்னிக்கவும்.

பிழை பொருத்தமைக்கு  ஆழ்ந்த  நன்றி.


Tuesday, November 22, 2016

He loved his music.

Probably I was ten years then.And those were the days when Carnatic music rasikas would exchange Music tapes, copy in a Double cassette player and return the original.My father who is a fan of Dr. Balamuralikrishna got a concert tape of Dr. Balamuralikrishna that had the jaya ragamalika Thillana .

That is the earliest memory of any  music in my life. And easily one of the best things to have happened in my life- Dr.Balamuralikrishna's music. This Thillana goes with me to my grave.

Thanum numtha dhara Thillana...

The child-like smile , the side way glances he casts at his pakka vadhya vidwans  when he enjoys his own singing are a treat to watch. The joy is infectious and leaves everyone smiling and happy.

Watch this Thamra lochani lathangi  to know what I mean.

A very fine musician indeed whose music was an aural and visual treat .

I particularly adore the way he says 'Hari' as a filler in  his songs . Here is a lovely 'Hari" in kapi Ragam.Kapi

Authentic and clinically pure music that it was, appealed to the trained and untrained ears alike.

The way he handled his critics with a sanguine chuckle and quick-wittedness was equally if not more amazing.

The rich voice , the ease with which he sings at all octaves, the confidence that oozes out as he sings and the communion with his accompanying artists made for grand performances that were always full-house and ended with resounding applause every single time.

Very late in life did I discover his compositional genius through his disciple Prince Rama Varma who has done an exceptional service to  rasikas and music students by unearthing many of Dr Balamuralikrishna's compositions. He sings them at his concerts and also teaches them at his workshops. Some of his compositions are really mind blowing.

One such song brought to light  by Prince Rama Varma is in Raga Sucharitra composed by
Dr Balamuralikrishna  on Deekshitar based on Muthuswamy Deekshitar's  Composition  on  Thiruvarur Thyagarajar in his Thyagaraja Yoga vaibhavam.,employing gopucha yati ( like a cow's tail -tapering ) and srotovoha yati ( like a river -expanding as it flows ).

A very beautiful composition by Dr Balamuralikrishna that encapsulates Deekshitar's life and times that employs the same techniques as employed by Deekshitar in his composition,


This is so very well articulated by Prince Rama Varma in this  awe inspiring educative and informative video. https://youtu.be/hXLAeJvv_Rc

This explanation and the song in the soulful ragam Sucharitra inspired a novice like me to pen something on Dr Mangalampalli Balamuralikrishna on similar lines. A feeble,precocious  attempt though..

Sunaada Mangalaankita Balamurali Ghanam
Naada Mangalaankita Balamurali Ghanam
Mangalaankita Balamurali Ghanam

Ankita Balamurali Ghanam
Bala murali Ghanam
Ghanam
Murali Ghanam
Manohara Murali Ghanam
Madhura Manohara Murali Ghanam
Adhi Madhura Manohara Murali Ghanam
Lokaadhi madhura manohara murali ghanam
sakala lokadhi madhura manohara murali ghanam  

These notes to myself that have remained with me since 2012 , came alive as Mahati and Lavangi. My guru  Dr Uma Ramasubramaniam has tuned this aptly in these two ragas and has rendered the same in her  lovely voice as a humble tribute to this Maestro.

Do check it out in the link below to listen to the same.

Murali ghanam in Mahati and Lavangi

Mahati and Lavangi are two of Dr.Balamuralikrishna's creations which are raga's with just four notes. Sa Ga Pa Ni  and Sa Ri Ma Da respectively.  Interesting that together they make it sampoornam!

Through Mahati and Lavangi I understood the full import of what Mozart had to say about musical notes .. "The music is not in the notes, but in the silence in between"

If his music was really grand , as a person he was most humble and humorous .

It was at Chennai airport that I met him once and it so happened we were traveling to the same destination. Little did I expect that I would be traveling seated right next to him. I was just not prepared for this pleasant surprise.He was so casual and got into a conversation that made me feel comfortable.

I will cherish those moments forever in my heart, while I carry with me his autograph that he so lovingly penned aboard the flight in a book that I had...
As Oscar Wilde says , when you do what you love the universe conspires on your behalf. And that results in pure, inspired magic.

He loved his music and had no qualms expressing it. Any wonder that we love his music too ?

His 'Hari' will resonate for a very long time..

Here is a link to my attempt at verbalizing a concert experience of Dr Balamuralikrishna. Murali Ghanam.
Friday, November 18, 2016

Adios amigos


Picture credits: Pinterest

This thought never surfaced when I was trolled, when there was a lull on my timeline or when the list of blocked people outnumbered the list of friends...

Most of my friends still have the time and energy for light, harmless banter online. And the wealth of knowledge I would be forgoing from brilliant groups will be a definite loss.

Have tried internet/ social media fasting. It only increased the craving. The thought of quitting would whither away with a notification beep and a white tick on a red square.

But the urge to quit is getting stronger by the day. Not backed by any time management / read-a-book-per-week goal or other such grandiose offline plans.

I want to make more real life conversations with listening as the agenda than stamping a 'like' or recording a 'comment' in an online thread.

Maybe I will read more, write more, go for a Sun walk. Just maybe. Especially the Sun walk.

None of my friends would believe if I said I want to spend more time in the kitchen, start baking my bread, or learn to swim 😇 with the sudden surplus hours on hand.

No. I am not shifting loyalties to Twitter or Instagram. The cap on word count scares me and my photographs are always grainy.

I will continue to have an online presence through my blogs, of course. Drop in readership though worries me 😟. ( Continue to be kind to me friends !)

Will continue to share the humble harvests and happenings of our little garden patch through my page  Sow What? and blog vijitablegarden .

My Page dedicated to the cause - Child sexual abuse, Ripples. Small pebble big waves. will continue to be till it gets converted into a blog.

My personal blog will be alive as long as my 'rant'ability and 'rant' appetite remain high. So I continue to be the  Most confused thing on two legs, And may be I will revive my travel blog Yatra!

( A true blue blogger aka Shameless blogger never misses an opportunity to promote it )

I enjoyed my time online. Made friends for keeps from a few forums. Hence this eulogy.
[No, I am not wiping away a secret tear now 😉.]

Aiyoh ! Face palm. I am unable to do this quietly. Addicted to attention, audience.

Precisely why I need to quit FB. Right NOW and HERE.

So relocating once again. This time to the real world.

Goodbye, Facebook. Goodbye, 2016.

Friday, October 7, 2016

நவராத்திரி நெருடல்கள்

ரொம்பவும் தயக்கத்துடன் தான் இதை எழுதுகிறேன். "எல்லாத்துலயும் குறை கண்டு பிடிக்கறதே வேலை இவளுக்கு "  என்று பலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது .ஆனால் சொல்லவில்லை என்றால் வெடிப்பது என் மண்டை தானே!

சின்ன வயதிலிருந்தே அம்மாவிடம் தர்க்கம் . " ஏன் நம் வீட்டில் வேலை செய்யும் மங்காவும் , வரதாவும் சுமங்கலிகள் இல்லையா ?" என்று.

அன்றிலிருந்து ஆரம்பித்தது என் அம்மாவிடமிருந்து.. முதலில் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு  தாம்பூலம் கொடுக்கும் பழக்கம்.

சுமங்கலி என்றால் கல்யாணம் ஆகி கணவனுடன் வாழ்பவர்கள் மட்டுமே என்ற அர்த்தம் அந்த சின்ன வயதில் அவ்வளவு உரைக்க வில்லை.

ஜாதி சார்ந்த சுமங்கலி பாகுபாடு மட்டுமே புலப்பட்டது அன்று.

கல்யாணமாகி பண்டிகைகள் , பிரார்த்தனைகள், என்று வரும்போது தான் திரை விலகி எப்படி நம் சமுதாயம்,மிகவும்  நுட்பமாக கணவனை இழந்தவர்களை நாசூக்காக எல்லா மங்கள காரியங்களிலும் நயமாக ஒதுக்கி வைக்கிறது என்பது புரிய தொடங்கியது .

கல்யாணங்களில் பாலிகை  தெளிக்க வேண்டுமா? கூப்பிடு சுமங்கலிகளை. சுமங்கலி பிரார்த்தனையா ? கூப்பிடு சுமங்கலிகளை.

ஹும் ..

சு-மங்கலி என்றால் என்ன? மிக- மங்களகரமான என்று பொருள். எத்தனை அழகான சொற்றொடர் !

இந்த சுமங்கலிகளிடமிருந்து அப்படி என்ன தான்  எதிர்பார்க்கப்படுகிறது கல்யாணங்களிலும் , மூத்தோர்  பிரார்தனைகளிலும்?

ஆசீர்வாதம் , பிரார்த்தனை. அவ்வளவே .

எங்கேயோ பிழை நடந்து கணவனை இழந்தவர்கள் சுமங்கலிகள் அல்ல என்று கருத்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

கணவனை இழந்தவர்கள் ஆசிர்வாதம் கொடுக்கமுடியாதா என்ன? பிரார்த்தனை செய்ய முடியாதா என்ன ?

பிறந்ததுமுதலே பெண்கள் பூவும் பொட்டும் அணிகிறோம் என்றால் கணவனை இழந்தபின் அவற்றை ஏன்  துறக்கவேண்டும் ?

எழுத்தாளர் சிவசங்கரி போன்றோர் இதற்கு விதிவிலக்கு. நல்ல முன்மாதிரியும் கூட.

இந்த பாகுபாடு மனதை மிகவும் நெருடுகிறது. கணவனை இழந்த பெண்களுக்கு இன்னும் எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்று நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.

எங்கள் வீட்டு  கொலுவிற்கு  எப்போதும்  போல்  எங்கள் குடியிருப்பில் உள்ள தோட்ட ம் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களை அழைத்திருந்தோம். அதில் இரண்டு பெண்கள் மிகவும் தயங்கி தயங்கியே வந்தனர்..ஒரு ஓரமாகவே நின்று உட்காரவும் மறுத்தனர். கண்ணாடி வளையல்களை வாங்கி கொள்ள மறுத்தனர்.

" ஏன்  கலர்,டிசைன் பிடிக்கவில்லையா?" என்று கேட்டேன். "ஐயோ அப்படியில்லை அக்கா , நாங்கள் போட்டுக்கொள்ள கூடாது " என்று மிகவும் தயக்கத்துடன் கூறினர் .

கண்ணாடி  வளையல் வேண்டாம் என்று கூறிய பெண்களை வற்புறுத்த ஆசை இருந்தும்..அவள் வாழும் சமுதாயம் அவளை அவதூறாக பேச காரணமாகிவிடக்கூடாது என்று விட்டு விட்டேன்.

நன்கு படித்து வேலைக்கும் செல்லும் ஒரு பெண்மணி எனது கொலு அழைப்பிற்கு தான் இது போன்ற அழைப்புகளை கணவன் இறந்த பின்  ஏற்பதில்லை என்று  வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பினாள். காரணம் கேட்டதற்கு மற்றவர்கள் சகஜமாக ஏற்பதில்லை என்றும் தனிப்படுத்தப்படுவதாகவும் கூறினாள்.

மிகவும் வற்புறுத்திய  பின்னர் யாரும் வராத ஒரு நேரத்தில் வந்து தாம்பூலம் வாங்கிச்சென்றாள்.


ஆனால் இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிந்தது..வெளிப்படையாய் இல்லை என்றாலும் ,மிகவும் நுட்பமானமுறையில் இன்னமும் நாம் கணவன் இழந்த பெண்களை தனிப்படுத்துகிறோம். பாகுபடுத்துகிறோம்.

சில சமயம் அறிந்தும். பல சமயம் அறியாமலும்...

கணவனை இழந்த ஒரு தோழி அவள்வீட்டு கொலுவிற்கு மற்ற பெண்களை கூப்பிடுவாள். ஆனால் மற்றொரு தோழியை  தாம்பூலம் கொடுக்கச் செய்வாள்.

" நீயே உன் கையால் கொடு நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் " என்று அவள் வீட்டுக்கு செல்லும் பெண்கள் வெளிப்படையாய் சொல்ல வேண்டும்.வற்புறுத்த வேண்டும் .

இம்முறை நவராத்திரி பண்டிகையின் போது நடந்த இந்த இரு சம்பவங்கள் மேலும் என்னை சிந்திக்க வைத்தது ... நான் மட்டும் சிந்தித்தால் போதாது.

நாம் எல்லோரும் சேர்ந்து சிந்திக்க வேண்டும் . தீவினை அகன்றிட வேண்டும்.

நமக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்று நினைத்தால் மட்டும் போதாது . செயல் படுத்த வேண்டும். வலிய சென்று முன்னோடியாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் குதர்க்கம், வீண் வாதம், பெரியோர் சொல்வதை எதிர்ப்பது என்பதே வழக்கம் என்று என்னை ஏசினாலும்  பரவாயில்லை.

இருப்பதோ  ஒரு தலை. வெடித்தால்   என்னாவது?  சொல்லாமலிருக்க முடியவில்லை.

பெண்ணாய் பிறக்கும் ஒவ்வொருவரும்  சுமங்கலியே.

Wednesday, October 5, 2016

குறை ஒன்றும் இல்லை


ஒரு கண்ணாடி கை  தடி போதும்  காந்தியை காண 

தொந்தியும்  தும்பிக்கையும் போதும் பிள்ளையாரை பார்க்க 

முண்டாசும் மீசையும் மட்டும் போதும்  மூத்த கவி பாரதிக்கு  

குழலும் மயில் பீலியும் போதும்  மாய கண்ணனுக்கு

குறை ஒன்றும் இல்லை!
Monday, September 26, 2016

வேண்டாமே இது போன்ற நவராத்திரி
9.நவ தான்ய சுண்டல் இருக்கட்டும் அதை
நவ நாகரீக பிளாஸ்டிக்கில்   அடைக்க வேண்டாமே

8.சருகிலையிலான தொண்ணை இருக்க
சாகா  வரம் பெற்ற  ஸ்டைரோபோம்  வேண்டாமே

7.மஞ்சள் குங்குமம் மடிப்பதற்கு காகிதம் போதுமே  
அலுமினிய பாக்கெட்டில் கொடுப்பது வேண்டாமே

6.மாவிலை தோரணம் மறந்தே போனதே ஐயோ ,
மாறாக வந்த தெர்மோகோல் தோரணம்  வேண்டாமே

5.அரிசிமாவு கோலமும் அடுக்களையில் கிடைக்கும் வர்ணமும் போதுமே
அமிலம் கலந்த மாவும் வர்ண பொடியும் வேண்டாமே

4.கொத்து மஞ்சளும்  கொட்டை பாக்கும் ,  "தேங்காய்" என கொடுக்கலாமே
மறுபரிசும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் எனில்   வேண்டாமே

3.பொரி கடலைக்கு காகித  பொட்டலம் போதுமே
மறுபடியும் பிளாஸ்டிக் வேண்டாமே

2.தாம்பூலம் தாங்க துணிப்பையை தூக்கி செல்லலாமே
அதற்கும்  அழிவில்லா பிளாஸ்டிக் பை வேண்டாமே

1.களிமண் பொம்மையும் விஷமில்லா வர்ண பூச்சும் வரவேற்று
மாசு படுத்தும் எந்த ஆடம்பரமும் வேண்டாமே !

வேண்டாமே இது போன்ற நவராத்திரி ...


Monday, September 12, 2016

முண்டாசு கவி


                                                                     

முண்டாசு கவியின் முகத்தையும்
முக்கால்  முகம் மறைக்கும் மீசையையும்
ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ,
ஐயோ,என் ஆயுளில்  கொஞ்சம் குறைத்து,
காணி நிலமும் , முத்துசுடர் போல் நிலாவொளியும்
பத்து பனிரெண்டு தென்னைமரம்
கத்தும்   குயிலோசை வீசும் தென்றல் -
மட்டுமே  கேட்ட மாகவியை
இன்னும் கொஞ்சம் நாள் இங்கு உலவ
விட்டிருக்கலாமே பராசக்தி என்று  கெஞ்ச தோன்றுகிறது.

கேட்டது காணி நிலம்
கொடுத்ததோ  கொள்ளாது இப்புலம் !Picture credits: P . Manivannan
http://www.thehindu.com/features/magazine/fantasy-in-verse/article5096145.ece

Saturday, July 16, 2016

When the dust settles

First and foremost, we are not dust to settle down.

And when the dust settles, you may have to mop it up.That is what I heard Rajdeep Sardesai is doing right now.

This post is patently dedicated to Rajdeep Sardesai and his tribe who are concerned about people "settling" down.

More about Rajdeep and his tribe Here.

Little do they know that getting married and then stepping into motherhood can be one of the most "unsettling" things on earth. Particularly on the Indian side of the planet, where ironically it is called "settling" down.

All Indians genetically are curious. About other's lives. Our mind does not rest unless and until the jigsaw is solved as we try and fit in any acquaintance  as a Bihari, Punjabi, Malayali, Tamil.

It does not stop there. One has to know your age and your father's profession. Whether you live in a rented or own dwelling.

And, why is the Bindi missing ? Especially down south.I hear it is all changing now. With Mehndi and Sangeet in Tambram weddings, a missing bindi is hardly noticeable.

Next, is the sighting of the mangal sutra or the absence of it. Either way, you are doomed.

If you are not sporting a mangal sutra and are above a certain age, you owe them an explanation as to why you are single.

Spotting a mangal sutra does not end this interrogation. It only gets more annoying from then on. Especially if you have a kid or you don't have one yet. Either way, as I said you are doomed.

"When are you planning the second one?"- If you have a Child.

"Did you see a doctor?"- If you have not started a family as yet. And of course, you get loads of free, unsolicited advice from here on with enquiries about which of the spouse has the "problem".

This question is asked with out a single batting of the eyelid. Amazing , no ? Most often you will be forced to make a note of a doctor's co-ordinates.

The questions are crafted so tricky that you cannot get away with a monosyllable answer. Answers will lead to more questions that sometimes may question your very existence.Sigh.

Our friendly neighbour 'mami' at Madras would not let anyone pass by without knowing the full agenda and a little more. We sisters were the 90's rebels constantly fighting with our Amma about 'pottu' or bindi. Our Amma used to beg us to have it on at least till we pass by the Pinocchio mami !

My poor mom would have to endure her comments about why her daughters turned out like this..no bindi, no pavadai-dhavani, no flowers on the braid! Imagine what would happen to all our sanskara. Sacrilege !

She once asked my mom -" Is this all she has ?" She was talking about my braid/hair. Ignoring my amma's pleading looks to shut up and move away, I said: " No,mami some of it is at home." Sure enough, mami was piqued as she picked the wrong one with that question.

Oh, yeah..this is how it all starts ..your hair, your clothes, your bindi, your education ( especially if you are not persuing Engineering, Medicine or CA ), your marital status, fertility concerns..family planning, settling down.

Sigh..from neighbourhood Mamis to HR Managers to TV anchors. We Indians are like that only.

A simple, " why would you want to know that ?" delivered with devilish impudence and a sweet smile shuts them up for ever.

Try it.

Sania Mirza's reply to Rajdeep Sardesai's  question about settling down is simply brilliant. Do check that out if you have not already."If everybody minded their own business, the world would go around a great deal faster than it does.”

― Lewis CarrollAlice in WonderlandMonday, June 27, 2016

பேசி தீர்க்கலாமா ? தீர்த்து விட்டு பேசலாமா?

எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து விடலாம் என்ற காலம்  போய் , "ஒரே அடியாய்   தீர்த்து விடலாம் " என்ற நிலைமை  எப்படி வந்தது ?

அநியாயத்தை எதிர்க்கும் சக்தி அற்று தேவை இல்லாத சகிப்புத்தன்மையை வளர்த்து கொண்டோமே அதனாலா ?

பள்ளி,கல்லூரி, அலுவலகம் சென்றால் பத்திரமாக திரும்ப வேண்டுமே என்ற கவலையில்  போருக்கு அனுப்புவது போல் கண்ணில் தூவ காரப்பொடி , மற்றும் சிறிதாய் காயப்படுத்த கத்தி என்று தயார் படுத்தி கொண்டோமே அதனாலா?

பரதம் ,சங்கீதம்   அதனோடு தற்காப்பு கலையும் வளர்த்தோமே பெண்களுக்கு அதனாலா ?

ஆபத்து வந்தால் எப்படி காப்பாற்றலாம் என்று ஆழ்ந்து யோசித்து,ஆபத்து வராமல் தடுப்பது எப்படி என்பதை சிந்திக்க மறந்தோமே அதனாலா?

எதில் நம்மை தொலைத்தோம்?

பாழடைந்த பங்களாவிலும் , ஆள் அரவமற்ற காடுகளிலும் , கும்மிருட்டும் ,பதுங்க இடமும் இருந்தால்  மாத்திரமே கொலை நடந்தது என்று நினைத்திருந்தோம் .

கொலை செய்பவன் யாரும் பார்க்க கூடாது என்று நினைத்தான். பார்ப்பவர்கள் சும்மாவா விடுவார்கள்? மிதித்து  விட மாட்டார்களா?

அதெல்லாம் அன்று.

செத்த பாம்பாய்,வாய் மூடி நின்று வேடிக்கை பார்த்தோம் பார்வையாளராய், இன்று.

காலப்போக்கில் எல்லாம் மாறியது போல் , மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்று தேற்றிக்கொண்டு , பட்டப்பகலில், வெட்ட வெளியில் , மக்கள் மத்தியில், தனியாய் வந்து வெட்டி வீழ்த்தி , நிதானமாய் நடந்து போகும் தைரியம் யார் கொடுத்தது? எங்கிருந்து வந்தது?

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன மஹாகவி பிறந்த மண்ணில் கூட்டத்தில் தனியாய், குருதியில், கேட்பாரற்று உயிர் நீத்த போது எல்லோரும் எங்கே இருந்தார்கள்?

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்றும்,நன்றி வேண்டாம் -நான் செய்த உதவியை  நீ நாலு பேருக்கு செய்து சங்கிலி தொடரை வளர்த்துவிடு என்றெல்லாம் வளர்ந்த சமூகம் எப்படி இப்படி மாறியது?

நமக்கேன் வீண் வம்பு என்று நயமாய் எப்போது நகர கற்று கொண்டது இச்சமூகம் ?

ஊரளவில் பஞ்சாயத்து , நாடளவில் பாராளுமன்றம் , உலகளவில் ஐக்கிய நாடுகள் சபை என்று  பேச்சுவார்தைக்கும்,சச்சரவு தீர்வுக்கும் வழி வகுத்தோம்.

வீட்டளவில்  என்ன செய்தோம் ? பேச்சு வார்த்தைக்கு இடமின்றி தற்கொலை ,கொலை என்ற தீர்மானத்திற்கு ஏன்  வந்தனர் நம் இளைஞர்கள் ?

கணக்கு பரிட்சையில் தோல்வியா ? எடு கயிற்றை , தொங்கு மின் விசிறியில்.

காதல் தோல்வியா ? கத்தி , வெட்டு , குத்து .

ஆள் வைத்து கொலை செய்த காலம் போய் தன் கையே தனக்குதவி என்ற அவல  நிலை.

நம் அக்கறை இன்மையும் , பிறருக்கு நடந்த அசம்பாவிதம் நம்மை அண்டாது என்ற அசட்டு நம்பிக்கையும் தான் காரணம்.

முற்றிலும் நாமே காரணம்.

ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்போம் ...

எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து விடலாம், என்பதே முதல் பாடமாய் இருக்கட்டும் நம் குழந்தைகளுக்கு.Deeply disturbed by the murder of a young IT professional at the Nugambakkam Railway station a couple of days back.Teaching self-defense to our daughters is like accepting and treating the ailment symptomatically.The cure, however, lies in educating our youth on anger management, conflict resolution and establishing trust and belief in dialogues.

That must be the motto of every new age parent, in my opinion.
#swathy murder
Saturday, June 4, 2016

Notes to myself and my teen


10. Please wish me with a hug and maybe a kiss before you text your wishes on my birthday.  My room is right next to your room you know and under the same roof.

9. Ditto for Mother's day, wedding anniversary and whenever your love and affection overflows or when you want to say sorry.

8. Try this.Make a tight ball out of your laundry and aim at the basket.I believe it works 99.99% of times.

7. We talk to you about being frugal all the time, but you don't have to wear the same sock for many days or different ones for each foot if you lose one.We can wash or even buy new ones and of course I am there always to come and search for the pairs that are right under your nose. You just have to yell for me!

6. I will remember to move away after a basic introduction to your friends and not crack jokes that embarrass you.

5. I am with you when you say adolescence has had bad press. Menopause too met with the same tragedy .

4. It is not easy trying to control my over-eating while I cater to yours.

3. I will not force you to wash your jeans. It is a promise. I will let you enjoy till it lasts.Just make sure you don't cut your skin while trying to you-know-what.

2. I will try not to discuss music with you -that strangely brings a war zone atmosphere in our home.

1. About reading habits. Mum is the word here too.

Please be patient with me. This thing called adolescence is new to me too.I don't think it existed when we were growing up, or maybe we had a different name for it.
And together we will strive to get over our comfort eating!